“அன்னைக்கே ஜோதிடர் சொன்னாரு… கேட்காம விட்டுட்டேனே..!” மகனிடம் புலம்பித் தீர்த்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் விஜய் எடுத்த அந்த அதிரடி முடிவா..? கசிந்தது ரகசியத் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்னைக்கே ஜோதிடர் சொன்னாரு… கேட்காம விட்டுட்டேனே..!” மகனிடம் புலம்பித் தீர்த்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் விஜய் எடுத்த அந்த அதிரடி முடிவா..? கசிந்தது ரகசியத் தகவல்..!!

Published

on

முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்திலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் வாஸ்து மற்றும் ஜோதிட செண்டிமெண்ட் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது ஆஸ்தான ஜோதிடரின் அறிவுறுத்தலின்படியே விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேஷ்டி, சட்டையுடன் தலைமைச் செயலகத்திற்கு வருவது, உடைகளில் மாற்றங்கள் செய்வது என விஜய்யின் ஜோதிட நம்பிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அவரது ராசிக்குத் தற்போதைய அறை வாஸ்துபடி அமையாததாலேயே இந்த அலுவலக மாற்றமும் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் தனது ஆதங்கத்தைப் புலம்பத் தொடங்கியுள்ளார். தான் முதலமைச்சராக இருந்தபோதும் அவரது ஆஸ்தான ஜோதிடர் முதலமைச்சரின் அறையை வாஸ்துபடி மாற்றுமாறு அறிவுறுத்தியதாகவும், ஆனால் அரசியல் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பயந்து தான் அதை மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். “ஒருவேளை அன்று ஜோதிடர் சொன்னபடி வாஸ்து மாற்றங்களைச் செய்திருந்தால், அதிகாரம் நிலைத்து நின்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கலாமோ?” என்று எடப்பாடி பழனிசாமி பேசிய அங்கலாய்ப்பு தற்போது அதிமுகவின் மேல்மட்ட தலைவர்களிடையே கசியத் தொடங்கியுள்ளது.

Advertisement

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்களையும், அதைத்தாண்டி எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஆட்டிப்படைக்கும் இந்த வாஸ்து விவகாரம் தமிழக அரசியலில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தனது வீட்டை மாற்றியதற்கும் இந்த வாஸ்து செண்டிமெண்ட்தான் காரணமோ என்ற சந்தேகங்களும் கட்சி நிர்வாகிகளிடையே எழுந்துள்ளன. விஜய்யின் இந்த அதிரடி மாற்றமும், அதனைக் கண்டு எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்திய புலம்பலும் சோஷியல் மீடியா மற்றும் அரசியல் களத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in