CINEMA
“விஜய்க்காக வெட்டவே போனேன்..!” பேட்டியில் உண்மையை உடைத்த நடிகை துஷாரா விஜயன்… உறைந்துபோன ரசிகர்கள்..!!
துஷாரா விஜயன் தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்த திறமையான நடிகை ஆவார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை துஷாரா விஜயன், தான் தீவிரமான விஜய் ரசிகை என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவயதில் விஜய் சாரைப் பிடிக்காது என்று கூறிய ஒருவரை ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டவே சென்றுவிட்டதாக அவர் நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திரையுலகில் இருக்கும் அனைவருக்கும் விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்புதான் என்றும், தமக்கு விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படத்தில் வெறும் 5 வினாடிகள் மட்டுமே தோன்றும் காட்சிதான் முதல் திரை அனுபவமாக அமைந்தது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். துஷாரா விஜயன் விஜய் மீது வைத்திருக்கும் இந்த தீவிரமான அன்பும், அவர் பேசிய அந்த வீடியோவும் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டர்களும் விஜய் ரசிகர்களும், “இது நம்ம புள்ளைனா…” என்று உற்சாகத்துடன் கமெண்ட்டுகளைத் தட்டி அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
