CINEMA
“உண்மை தெரியாம தப்பா பேசுறாங்க..! குடும்ப சர்ச்சைகள் பற்றி ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்..!!”
நடிகராக தனது பயணத்தைத் தொடங்கித் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் ஜோசப் விஜய். ஆனால், அவரது குடும்ப வாழ்க்கையில் பல புயல்கள் வீசி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், தற்போது விஜய்யுடன் அவரது மனைவியோ அல்லது பிள்ளைகளோ உடன் வசிக்கவில்லை. விஜய்யின் மகனும் மகளும் சென்னையிலும், மனைவி சங்கீதா லண்டனிலும் வசித்து வருவதாகவும், விஜய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தற்போது எந்தவொரு தொடர்பும் பேச்சும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்குத் தனது தந்தை மீது எந்தக் கோபமும் இருப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், தனது இயக்கம் மற்றும் குடும்பத்தைப் பற்றி இணையத்தில் வெளியாகும் செய்திகள் மற்றும் கமெண்டுகளைப் படிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் தன்னை ஊக்குவிக்கும் மற்றும் படைப்பு ரீதியான நல்ல கருத்துகளைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ஏனெனில் திரைப்படங்கள் மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என்றும் நேர்மறையாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியாகும் வதந்திகளுக்குப் பதிலளித்த சஞ்சய், “என்னைப்பற்றி எதுவும் தெரியாமல் கற்பனையாக எழுதப்படும் கதைகளை நம்மால் தடுக்க முடியாது; யாரையும் திருப்திப்படுத்தவும் நான் விரும்பவில்லை. உண்மைதான் எப்போதும் வலிமையானது, நான் உண்மையாக இருக்கும்போது மக்களும் அதை உணர்வார்கள்” எனக் கூறியுள்ளார். அத்துடன், தனது குடும்பத்தின் மீது மக்கள் காட்டும் அளப்பரிய அன்பைப் பார்த்துத் தான் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும், அந்த அன்பிற்கும் நம்பிக்கைக்கும் எப்போதும் பாத்திரமாக நடந்துகொள்வேன் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
