LATEST NEWS
BIG NEWS: இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… ரேஷன் அட்டைதாரர்களே மறக்காம உடனே கிளம்புங்க… !!
அனைத்து ரேஷன் கடைகளிலும் e-KYC பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் இதுவரை தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள் அனைவரும் இன்று நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி, தங்களின் விரல்ரேகை மற்றும் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
பணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காகத் தற்போது வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வருபவர்கள், தங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு ரேஷன் கடைக்கே நேரடியாகச் சென்று தங்களது கைவிரல் ரேகையைப் சுலபமாகப் பதிவு செய்ய முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த முக்கியமான தகவலை உங்களது நண்பர்கள் மற்றும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
