LATEST NEWS
ஐயோ.. என்ன கொடுமை..! “11 வயசில் கல்யாணம்… 13 வயசில் நீதிமன்றம்..!” 7 மாதக் குழந்தையை மீட்க சிறுமி நடத்திய மாஸ் போராட்டம்.. குட்டி அம்மாவின் நெஞ்சை பிழியும் கதை..!!
வங்கதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூய், தனது 7 மாதக் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி சிரிக்கும் புன்னகைக்கு பின்னால் ஒரு பெரும் போராட்டக் கதையே மறைந்துள்ளது. ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான 22 வயது ஷகிப் மியா என்பவரைத் தனது 11-வது வயதில் திருமணம் செய்த ஜூய்க்கு, ஓராண்டிற்குப் பிறகு குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில காலத்திலேயே கணவராலும் மாமியாராலும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
13-year-old mother goes to court to get her 7-month-old baby back!!
This girl’s name is Jui. Although Jui is 13 years old, the baby that Jui is holding in her arms and smiling sweetly in front of the camera is Jui’s 7-month-old baby.
Jui married 22-year-old Shakib Mia after… pic.twitter.com/z3A1YlG5tl— मृदुल눈 (@shayari_in_) July 31, 2026
இதனால் தனது பச்சிளம் குழந்தையைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே குழந்தையை மீண்டும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், 13 வயதிலேயே தைரியமாகச் சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்தார் ஜூய். நீதிமன்றத்தின் தலையீட்டால் இறுதியாகக் குழந்தை மீண்டும் ஜூயிடம் ஒப்படைக்கப்பட்டது. தாய்மைக்கும் அன்பிற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் இச்சம்பவம், இளம் வயதிலேயே ஜூய் எதிர்கொண்ட துயரத்தையும், குழந்தையை மீட்பதற்காக அவர் நடத்திய உறுதியான போராட்டத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
