CINEMA
பகீர்..! 9 மாதக் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்.. சர்வதேசக் கபடி வீரரின் மனைவி செய்த காரியம்.. பின்னணியில் உள்ள பகீர் காரணம்.. பெற்றோர் ஆவேசப் போராட்டம்..!!
சர்வதேச கபடி வீரர் ஷீலு பல்ஹாராவின் மனைவி முஸ்கான் பல்ஹாரா, வெள்ளிக்கிழமை மாலை ரோஹ்தக் மாவட்டத்தின் பாஹு அக்பர்பூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஃபர்மானா கிராமத்தைச் சேர்ந்த முஸ்கான், கடந்த 2023 டிசம்பரில் ஷீலுவை மணந்தார். இவர்களுக்கு ஒன்பது மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. முஸ்கானின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதாரங்களைச் சேகரித்ததுடன் உடலை பிரேத பரிசோதனைக்காக ரோஹ்தக் பிஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Muskan Balhara, wife of international kabaddi player Sheelu Balhara, allegedly died by suicide at her residence in Bahu Akbarpur village of Rohtak district on Friday evening.
Rohtak SP Gaurav Rajpurohit said an investigation is underway and family members’ statements are being… pic.twitter.com/yQzl4fytAY— Hate Detector 🔍 (@HateDetectors) August 1, 2026
முஸ்கான் குடும்பத்தினர் அவர் வரதட்சணை மற்றும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி, வீட்டின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோஹ்தக் எஸ்பி கௌரவ் ராஜ்புரோஹித், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் ‘ஹரியானா ஆலா சீதா’ என்று அழைக்கப்படும் ஷீலு பல்ஹாராவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறு வயதிலேயே கபடி ஆடத் தொடங்கி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அணிகளுக்காக விளையாடிய முன்னணி கபடி வீரரின் வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
