CINEMA
“இது மனுஷனே இல்ல.. மிருகம்..!” பெண்ணின் பிணத்துடன் உறவு வைத்த சைக்கோ கொடூரன்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!!
சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில், 42 வயதான நபர் ஒருவர் செய்த கொடூரமான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த நபரைப் பிடித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த வாக்குமூலம் அதிகாரிகளையே உறைய வைத்துள்ளது. 50 வயது பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்த அவர், அந்தப் பிணத்துடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் குற்றத்தைச் மறைப்பதற்காக, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையில் அந்த நபர் ஏற்கனவே மனநலப் பிறழ்வு மற்றும் குற்றப் பின்னணி கொண்ட ஒரு ‘சைகோ’ கொலைகாரன் என்பது அம்பலமாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டிலும் இவர் இதேபோன்று ஒரு பெண்ணைக் கொலை செய்து, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் மீண்டும் அதேபோன்ற கொடூரக் குற்றத்தில் அவர் ஈடுபட்டுள்ளதால், போலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
