LATEST NEWS
“என் மீது கோபம் இருக்கலாம்… ஆனா என் தாயாரைப் பேசுவதா..?” சமூக வலைதளங்களை உலுக்கும் மோடியின் உருக்கமான வீடியோ..!!!
தன் மீதும், மறைந்த தனது தாய் மீதும் திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மிகுந்த மனவேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் உயர்வுக்காகவும் தான் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், தன் மீது பரப்பப்படும் அவதூறுகளும் போலிப் பிரசாரங்களும் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Abuses never solve anything.
Let’s guide the misguided.
Let’s work together.
Let’s work for Bharat. pic.twitter.com/yAePG60KYL— Narendra Modi (@narendramodi) July 31, 2026
தன்னை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கோபத்திற்கான காரணம் தனக்குப் புரிவதாகத் தெரிவித்த பிரதமர், இருப்பினும் அவதூறு பரப்புபவர்களைத் தான் மன்னிக்க விரும்புவதாகக் கூறினார். தவறான செய்திகளாலும் போலியான தகவல்களாலும் வழிதவறிச் சென்றவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்து நல்வழிப்படுத்த வேண்டியது தமது பொறுப்பும் கடமையும் ஆகும் என்றும், நாட்டின் முன்னேற்றப் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த வீடியோவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
