CINEMA
“அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண முடியுமா..?” பட வாய்ப்புகளை இழந்த கதையை.. ஓபனாக உடைத்த சீரியல் நடிகை லதா ராவ்..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’, ‘செல்வி’, ‘திருமதி செல்வம்’ போன்ற புகழ்பெற்ற மெகா சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை லதா ராவ். இவர் சீரியல்கள் மட்டுமின்றி, நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘தில்லாலங்கடி’ திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். நடிகர் ராஜ்கமலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைய சமூகத்தில் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களின் பொறுப்பு எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதைப் பகிர்ந்துள்ளார். தனக்கு 15 வயது இருக்கும்போது எது சரி, எது தவறு என்பதைத் தன் தாய் கற்றுக் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் இன்று ஒரு தாயானவள் தன் இரண்டு வயதுக் குழந்தைக்குக் கூட ‘குட் டச்’ மற்றும் ‘பேட் டச்’ பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் உருவாகிவிட்டது என்று கவலை தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்ற விஷயம் முற்றிலும் இல்லை என்று கூறிவிட முடியாது எனப் பேசிய லதா ராவ், ஒரு பட வாய்ப்புக்காகத் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக் கேட்டால் அதைத் தவிர்த்துவிடலாம் என்றார். மேலும், தன்னிடம் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முடியுமா என்று கேட்டபோது, அதற்குத் தான் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும், இதன் காரணமாகத் தனக்குக் கிடைக்கவிருந்த சில திரைப்பட வாய்ப்புகளையும், முக்கியக் கதாபாத்திரங்களையும் இழக்க நேரிட்டது என்றும் அவர் அந்தப் பேட்டியில் ஓபனாகப் பேசியுள்ளார்.
