CINEMA
“என்னை அப்படி கூப்பிட்டாங்க.. ஆனா நான் சொன்ன பதில் இதுதான்..!” படுக்கைக்கு அழைத்த நபருக்கு குஷ்பூ கொடுத்த மரண பயம்..!!
சினிமா துறையில் நீண்டகாலமாக இருந்து வரும் தனக்கு இதுவரை ‘காஸ்டிங் கவுச்’ போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை என்று பிரபல நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தனக்கான எல்லையையும் சுயமரியாதையையும் தொடக்கத்திலிருந்தே மிகத் தெளிவாகப் பேணி வந்ததாகக் கூறிய அவர், இதுபோன்ற தவறான அணுகுமுறைகளுக்கு இடம் தராமல் தவிர்ப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒருமுறை ஓர் நபர் தன்னை தவறான எண்ணத்தோடு அணுகியபோது, அதற்கு உடனடியாகத் தக்க பதிலடி கொடுத்ததாகக் கூறியுள்ளார். “என்னுடைய செருப்பு சைஸ் 41, அதை மேக்-அப் ரூமில் வாங்கி கொள்கிறீர்களா அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரின் முன்னிலையிலும் வாங்கி கொள்கிறீர்களா?” என்று மிக நேரடியாகவே எச்சரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சூழல்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முழு உரிமையும் முடிவும் பெண்களிடமே இருக்கிறது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
