அதிர்ச்சி.! கஜினி முதல் ஜில்லா, வீரம் வரை.. நூற்றுக்கணக்கான படங்களில் வில்லனாக மிரட்டிய பிரபல நடிகர் புற்றுநோயால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் …!! – cinefeeds
Connect with us

CINEMA

அதிர்ச்சி.! கஜினி முதல் ஜில்லா, வீரம் வரை.. நூற்றுக்கணக்கான படங்களில் வில்லனாக மிரட்டிய பிரபல நடிகர் புற்றுநோயால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் …!!

Published

on

பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் பிரதீப் ராவத் (74) ரத்தப் புற்றுநோய் காரணமாக மும்பையில் காலமானார். பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற ‘மஹாபாரதம்’ தொடரில் அஸ்வத்தாமாவாக அறிமுகமான இவர், ஏ.ஆர்.முருகதாஸின் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘கஜினி’ படத்தில் நடித்த மிரட்டலான வில்லன் கதாபாத்திரம் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தமிழில் கஜினி, தொட்டி ஜெயா, வீரம், ஜில்லா, எலி, ஆம்பள உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் முதன்மையான வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் நடித்துள்ளார். அமீர்கானின் ‘லகான்’ படத்தில் ‘தேவா’ என்ற சீக்கிய சிப்பாயாக நேர்மறையான கதாபாத்திரத்திலும் முத்திரை பதித்தார். குறிப்பாக, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த முதல் தெலுங்குத் திரைப்படமான ‘Sye’ படத்திற்காகச் ‘சிறந்த வில்லன்’ விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்குப் பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in