“இப்படி ஒரு சிரிப்பைப் பார்த்ததே இல்லை.. 80 வயது தந்தைக்கு மகன் கொடுத்த மறக்க முடியாத பரிசு.. நெட்டிசன்களைக் கலங்க வைத்த வீடியோ..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படி ஒரு சிரிப்பைப் பார்த்ததே இல்லை.. 80 வயது தந்தைக்கு மகன் கொடுத்த மறக்க முடியாத பரிசு.. நெட்டிசன்களைக் கலங்க வைத்த வீடியோ..!!!

Published

on

ஒடிசா மாநிலம் கோணார்க்கில் உள்ள புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரைக்கு, ஸ்ரீகாந்த் என்பவர் வாழ்நாளில் ஒருமுறை கூட கடலைப் பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்து வந்துள்ளார். 80 வயதில் முதன்முறையாகக் கடலைக் கண்ட அந்தப் பெரியவர், ஒரு சிறு குழந்தையின் ஆச்சரியத்தோடும் பேரானந்தத்தோடும் அலைகளைப் பார்த்ததுடன், கடலைத் தொட்டு வணங்கித் தனது மரியாதையையும் செலுத்தியுள்ளார். “80 வயதில் என் தந்தையின் முகத்தில் இந்தச் சிரிப்பைக் காண்பதே எங்கள் வாழ்க்கையின் பொன்னான பொக்கிஷம்” என்ற குறிப்புடன் மகன் ஸ்ரீகாந்த் இணையத்தில் பதிவிட்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ, 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

இயற்கையைத் தெய்வமாக மதித்துத் தொட்டு வணங்கிய அந்தப் பெரியவரின் எளிமையையும், தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகனின் அன்பையும் பார்த்து இணையவாசிகள் திரளான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “முதல்முறையாக ஒருவர் கடலைக் காலால் மிதிக்காமல், கைகளால் தொட்டு வணங்கியதைக் கண்டு கடலே மகிழ்ச்சியடைந்திருக்கும்” என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் இந்த அளப்பரிய அன்பைக் கண்டு நெகிழ்ந்த ஸ்ரீகாந்த், பயனர்களின் கருத்துகளைத் தனது தந்தைக்குப் படித்துக் காண்பித்து அவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதாக நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in