“இந்தியாவில் உடனே டாக்டர் கிடைப்பாரு… இங்க ஒரு வாரம் காத்திருக்கணுமா..?” 10 நாட்களாகத் தொடரும் கடும் இருமல்… மகனுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்த நியூசிலாந்து மருத்துவமனை..! வளர்ந்த நாட்டின் கசப்பான நிஜத்தைப் அம்பலப்படுத்திய இந்தியத் தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்தியாவில் உடனே டாக்டர் கிடைப்பாரு… இங்க ஒரு வாரம் காத்திருக்கணுமா..?” 10 நாட்களாகத் தொடரும் கடும் இருமல்… மகனுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்த நியூசிலாந்து மருத்துவமனை..! வளர்ந்த நாட்டின் கசப்பான நிஜத்தைப் அம்பலப்படுத்திய இந்தியத் தாய்..!!

Published

on

வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் சென்றால் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் எனப் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால், நியூசிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவாஸ்தவா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ இந்த நம்பிக்கைக்கு மாறான ஒரு கசப்பான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளது. தனது 10 வயது மகனுக்குக் கடந்த 10 நாட்களாகத் தொடர் இருமல் இருந்தபோதிலும், அவனுக்குச் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்ட வேதனையை அவர் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

ஆகிருதி தனது மகனின் உடல்நிலை மோசமடைந்ததால், உள்ளூரில் உள்ள மருத்துவ மையத்தைத் தொடர்புகொண்டு மருத்துவரைச் சந்திக்க நேர ஒதுக்கம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஒரு வாரம் கழித்தே மருத்துவரைச் சந்திக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், முன்அனுமதி தேவையில்லாத ‘ஆஃப்டர்-அவர்ஸ் கிளினிக்’ -க்குத் தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார். எனினும், அங்கு கிளினிக் முழு கொள்ளளவை எட்டிவிட்டதாகவும், இனி புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாது என்றும் வாசலில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

https://www.instagram.com/reel/Db-g4BAxscj/?utm_source=ig_web_button_share_sheet

அந்த அறிவிப்புப் பலகையையே வீடியோவாக எடுத்துப் பதிவிட்ட ஆகிருதி, நியூசிலாந்து போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் அவசரக் காலங்களில் கூட மருத்துவரைச் சந்திப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்றும், அதே வேளையில் இந்தியாவில் உடனுக்குடன் அன்றைய தினமே மருத்துவரைப் பார்க்க முடியும் என்றும் இரு நாடுகளின் மருத்துவ அமைப்புகளையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, லண்டன் உள்ளிட்ட பிற நாடுகளில் வாழும் பல இந்தியர்களும் தாங்கள் எதிர்கொண்ட இதுபோன்ற மோசமான மருத்துவ சேவை அனுபவங்களை கருத்துப் பகுதியில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in