“ஒரே நாளில் 5.5 மில்லியன் வியூஸ்… இன்ஸ்டா ரீல்ஸ்க்காக காரை ‘Kissing Car’ ஆக மாற்றி கெத்து காட்டிய வாலிபர்…! கடைசியில் வாளியும் கையுமா நிக்க வச்ச காவல்துறை..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரே நாளில் 5.5 மில்லியன் வியூஸ்… இன்ஸ்டா ரீல்ஸ்க்காக காரை ‘Kissing Car’ ஆக மாற்றி கெத்து காட்டிய வாலிபர்…! கடைசியில் வாளியும் கையுமா நிக்க வச்ச காவல்துறை..!!”

Published

on

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில், இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ செய்து லைக்குகள் மற்றும் வியூஸ்களைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர் ஒருவர் தனது காரை விசித்திரமான முறையில் ‘கிஸ்ஸிங் கார்’ ஆக மாற்றினார். அந்த இளைஞரின் காதலி, காரின் முழு உடற்பகுதியிலும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கால் முத்தமிட்டது போன்ற முத்திரை அடையாளங்களை வரைந்தார். இந்த கார் சாலையில் அதிவேகமாகச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு, ஒரே நாளில் சுமார் 55 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று வைரலானது.

சாலையில் இயக்கப்பட்ட இந்த விசித்திரமான காரின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து, குவாலியர் போக்குவரத்துப் காவல்துறை இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டது. வீடியோவின் அடிப்படையில் காரின் பதிவெண்ணைக் கண்டறிந்த காவல்துறை, தாட்டிபூர் பகுதியில் இருந்த அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து, போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Advertisement

காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட கார் உரிமையாளரான இளைஞர், சமூக வலைதள மோகத்தில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். இதன்பின்னர், மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதற்காக அந்த இளைஞருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காவல் நிலைய வளாகத்திலேயே தனது சொந்த கைகளால் காரில் இருந்த லிப்ஸ்டிக் முத்திரை அடையாளங்கள் அனைத்தையும் தண்ணீரை ஊற்றி அவர் கழுவி சுத்தம் செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in