LATEST NEWS
“பெண்களுக்குப் புருஷனாக நிற்போம்” தவெக மேடையில் உளறிய நடிகர் சௌந்தரராஜா.. “ஐய்யயோ ட்ரோல் பண்ணுவாங்க” உடனே கொடுத்த பகீர் விளக்கம்..!!
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகியும் நடிகருமான சௌந்தரராஜா, “பெண்களுக்குப் புருஷனாகத் துணை நிற்போம்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது மேடையில் பெரும் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியைப் பிடித்து 4 மாதங்கள் ஆகும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அவர் மேடையில் பேசும்போது, “நீங்கள் போகிற இடமெல்லாம் உங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். நீங்கள் என்ன பண்ணினாலும் உங்களுக்குப் பின்னால் அண்ணனாக, தம்பியாக, மாமனாக, புருஷனாக எல்லாவற்றிலும் நாங்கள் நிற்போம்” எனக் கூறினார். தான் பேசிய வார்த்தையின் விபரீதத்தை உடனே உணர்ந்த அவர், “அக்கா, தம்பியைப் பார்த்த சந்தோஷத்தில் உணர்ச்சிவசப்பட்டு மாற்றிச் சொல்லிவிட்டேன்; இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற அர்த்தத்தில்தான் கூறினேன்” என உடனடியாக மேடையிலேயே விளக்கமும் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரை நோக்கிக் காரசாரமாகப் விமர்சித்த சௌந்தரராஜா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை ‘ஆபாசநிதி’ என்று விமர்சித்தார். தவெக பெண் அமைச்சர்களை எதிர்க்கட்சியினர் மேடைகளில் அசிங்கமாகப் பேசுவதாகவும், அதனைத் தடுத்துக் கேட்காமல் உதயநிதியும் அன்பில் மகேசும் மேடையில் சிரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்து பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறும், “பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்தால் தாங்க முடியாது” என்றும் அவர் காட்டமாகப் பேசினார்.
