LATEST NEWS
டிரம்பிற்கு அடுத்த அதிர்ச்சி..! “உங்க மனைவி மெலனியா பணம் வாங்கினார்” வெள்ளை மாளிகை முன்னாள் செயலாளரின் பகீர் குற்றச்சாட்டு.. அம்பலமான ரகசியங்கள்..!!
டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், தனது கணவருடன் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்வதற்கே பணம் வாங்கியதாக வெள்ளை மாளிகையின் முன்னாள் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்தின் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சாரா, இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தான் ஓராண்டு காலம் வெள்ளை மாளிகையிலும் தேர்தல் பிரச்சார பணிகளிலும் வேலை பார்த்தபோது, மெலனியாவை அங்கு சந்தித்ததே இல்லை என்று சாரா மேத்யூஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், மெலனியாவுக்கு வெள்ளை மாளிகையில் வசிப்பது பிடிக்கவில்லை என்றும், அது ஒரு பழைய, சிதைந்து கிடக்கும் இடம் என அவர் விமர்சித்ததாகவும் சாரா குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையை விட நியூயார்க்கில் நேரம் செலவிடுவதையே அவர் அதிகம் விரும்பியுள்ளார்.
ஏற்கனவே டொனால்டு டிரம்பிற்கும் அவரது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்தச் சூழலில், கணவரின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்கவே மெலனியா பணம் பெற்றார் என்ற இந்த புதிய குற்றச்சாட்டு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
