LATEST NEWS
“இனிமேல் இப்படி ஒருத்தராலும் பண்ண முடியாது..!” தவெக-வின் 100 நாள் சாதனை மேடையில் திமுக-வை அலறவிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கரின் அனல் பறக்கும் பேச்சு..!!
“இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இரண்டே இரண்டு அற்புதங்கள் தான் நடந்துள்ளன; அதில் முதலாவது அற்புதம், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மாபெரும் மக்கள் ஆதரவோடு கோட்டையைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருப்பதுதான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.வஆர். விஜயபாஸ்கர் தவெக-வின் வரலாற்று வெற்றியைப் பாராட்டி அதிரடியாகப் பேசியுள்ளார். தவெக-வின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்திய அரசியலில் இதற்கு முன்பு இப்படி ஒரு அற்புதம் நிகழ்ந்ததுமில்லை, இனிமேல் நடக்கப் போவதுமில்லை என்றும், இந்த அசாத்திய சாதனையைச் செய்யக்கூடிய ஒரே தகுதி ‘தளபதி’ விஜய்க்கு மட்டும்தான் இருந்தது என்றும் மேடையில் முழங்கினார்.
அதிமுக-வின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் விசுவாசிகள் பலர் தவெக அரசு அமைவதற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியதால்தான், ஒரு பைசா கூடச் செலவில்லாமல் மிக அமைதியான முறையில் முதலமைச்சர் விஜய் ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்ற முடிந்தது என்ற உட்கட்சி ரகசியத்தையும் எம்.வஆர். விஜயபாஸ்கர் ஓப்பனாகப் போட்டுடைத்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் தற்போதைய சுயநலத் தலைவர்களைப் பிடிக்காமல் தவெக-வின் நேர்மையான கொள்கைகளை ஆதரித்ததாக அவர் குறிப்பிட்டார். தவெக-வின் இந்த அசுர வேக மக்கள் செல்வாக்கைப் பார்த்து மிரண்டுபோயுள்ள திமுக, இன்னும் சில காலங்களில் தமிழ்நாட்டு அரசியலை விட்டே முற்றிலும் காணாமல் போகப்போவது உறுதி என்றும் அவர் தனது பேச்சில் மிகக் காரசாரமாகத் தெரிவித்தார்.
