“நான் LOC-ல நாட்டுக்குச் சேவை செய்யவா.. இல்ல என் குடும்பத்தைக் காப்பாத்த ஓடி வரவா..?!” எல்லையில் நின்றபடி கதறிய ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் LOC-ல நாட்டுக்குச் சேவை செய்யவா.. இல்ல என் குடும்பத்தைக் காப்பாத்த ஓடி வரவா..?!” எல்லையில் நின்றபடி கதறிய ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நாட்டுக்காகத் தன் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றி வரும் இந்திய ராணுவ வீரர் வீர் பகதூர் சிங், உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் இருக்கும் தனது குடும்பத்தினர் நில மாஃபியாக்களால் கொடூரமாக மிரட்டப்படுவதாகக் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.-யின் சுரியா கிராமத்தில் வசிக்கும் தனது வயதான பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் நில மாஃபியாக்கள் மற்றும் ரவுடிகளால் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் நிலவி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நான் இங்கே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நின்று நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டுமா, அல்லது அங்குள்ள என் குடும்பத்தின் பாதுகாப்பை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா?” என அவர் எழுப்பியுள்ள உருக்கமான கேள்வி ஒட்டுமொத்த தேசத்தின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது.

देश के जवान का दर्द…भू-माफियाओं से परेशान परिवार..CM योगी से मिलने और सेना द्वारा 2 बार लेटर जाने के बावजूद दबंग माफियाओं पर नहीं हुई कोई कार्यवाही..!

वीर बहादुर कहते है कि –
मैं यहां LOC पर देश सेवा करूं या अपने परिवार की सुरक्षा की चिंता में पड़ा रहूं..!

जम्मू-कश्मीर LOC… pic.twitter.com/NE5SQFRYPG— Rahul Saini (@JtrahulSaini) August 24, 2026

இந்த நில மாஃபியாக்கள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து முறையிட்டும், இந்திய ராணுவத் தரப்பிலிருந்து உத்தரப் பிரதேச அரசுக்கு இரண்டு முறை அதிகாரப்பூர்வக் கடிதங்கள் அனுப்பப்பட்டும், ஆளுங்கட்சி பலம் கொண்ட அந்த ரவுடிகள் மீது இதுவரை எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராணுவ வீரர் பகிரங்கமாகப் போட்டுடைத்துள்ளார். ரவுடிகளின் அராஜகம் எல்லை மீறிச் சென்றுவிட்டதால், தற்போது வேறு வழியின்றித் தனது குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நீதிக்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு இந்த வீடியோ மூலம் அவர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டைப் பாதுகாக்கும் ஒரு ராணுவ வீரரின் குடும்பத்திற்கே இந்த அவல நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்ற காரசாரமான விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in