LATEST NEWS
“இது தெரியாம போச்சே..!” வாரம் 2 முறை சுண்டைக்காய் சாப்பிட்டா உடம்பில் என்ன நடக்கும் தெரியுமா..?! நீங்களே ஆச்சரியப்படுவீங்க.. மருத்துவர்கள் சொன்ன அதிரடி உண்மை..!!
சுண்டைக்காயை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, உடலில் ஏற்படும் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும். மேலும், செரிமான மண்டலத்தைச் சீராக்கி வயிற்றுப் புண்களை குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.
ஆஸ்துமா மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சுண்டைக்காய் ஒரு சிறந்த நிவாரணியாகச் செயல்பட்டு, நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். அதுமட்டுமின்றி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் சுண்டைக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.
