CINEMA
“100 கோடி கொடுத்தாலும் திரும்ப வரமாட்டேன்” புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசப் பதிவு… கதறித் துடித்து சோசியல் மீடியாவை விட்டே வெளியேறிய ஐஸ்வர்யா லட்சுமி.!!
‘ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பிரபல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக விலகியதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். தனது புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு, இணையத்தில் தவறான கருத்துகளுடன் பதிவிடப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான மனவேதனையே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய எதிர்மறையான சூழல் தன் மனநலனைப் பெரிதும் பாதித்ததாக அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய பிறகு தனக்கு மிகுந்த மன அமைதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, இனி எந்தச் சூழ்நிலையிலும் அதில் மீண்டும் இணையப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். யாராவது ரூ. 100 கோடி கொடுத்தாலும் கூட மீண்டும் சோசியல் மீடியாவுக்குத் திரும்ப மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவரது இந்த முடிவு, திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
