“உடம்பெல்லாம் ஒரே இரத்தக் கட்டுகள், உடைந்த மணிக்கட்டு” நாகர்கோவில் வியாபாரி சிறை மரணத்தில் வெளியான பகீர் உடற்கூறாய்வு அறிக்கை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“உடம்பெல்லாம் ஒரே இரத்தக் கட்டுகள், உடைந்த மணிக்கட்டு” நாகர்கோவில் வியாபாரி சிறை மரணத்தில் வெளியான பகீர் உடற்கூறாய்வு அறிக்கை..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தரப்பில் முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள உடற்கூறாய்வு அறிக்கை அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, மூச்சுத்திணறித்தான் மரணமடைந்துள்ளார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அவரது உடலில் 19 இடங்களில் கொடூரமான காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவரது வலது கை மணிக்கட்டு எலும்பு முற்றிலும் உடைந்துள்ளதோடு, பலத்த தாக்குதலால் மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வீக்கமடைந்த நிலையில் இருந்துள்ளன. மேலும், அவரது இதயம் மற்றும் நுரையீரலின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள சிறிய புள்ளிகள், அவர் உயிரிழப்பதற்கு முன்பு தப்பிக்கக் கடுமையான போராட்டம் நடத்தியதையும், அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அவரது உயிர் பிரிந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளன.

Advertisement

மிகவும் கொடூரமாகச் சபரிவர்மனின் கைகள் மற்றும் கால்களைக் கயிற்றால் கட்டிப்போட்டு அடித்ததற்கான ஆழமான தழும்புகளும் காயங்களும் அவரது உடலில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறைச்சாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறைக் கைதிகளான ரவுடிகள் அஜித், பெருமாள், ஜெகன் உள்ளிட்ட 8 பேரையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தலைமை வார்டன் திருமலைநம்பி சுரேஷ், வார்டன்கள் சிவக்குமார் மற்றும் ஜெகன் ஆகிய 3 சிறைத்துறை ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in