உதயநிதி பிரச்னை.. நள்ளிரவில் திமுகவினர் 2 பேர் கைது.. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

POLITICS

உதயநிதி பிரச்னை.. நள்ளிரவில் திமுகவினர் 2 பேர் கைது.. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!

Published

on

தஞ்சாவூரில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களை அவதூறாகப் பேசியதாக திமுக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தஞ்சை மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பேரில், திமுக மாநகராட்சி கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் மருத்துவக் கல்லூரி பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வயலூர் கார்த்தி (கார்த்திகேயன்) ஆகிய இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தவெக கொடிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in