BREAKING:ஆகஸ்ட் 8 ஆம் தேதி… அனைத்து MP-க்களுக்கும்முதல்வர் விஜய் விடுத்த அழைப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:ஆகஸ்ட் 8 ஆம் தேதி… அனைத்து MP-க்களுக்கும்முதல்வர் விஜய் விடுத்த அழைப்பு…!!

Published

on

ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அரசியல், நிதிசார் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்திற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-வது தளத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மாநிலத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் எவ்வாறு முன்வைப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in