LATEST NEWS
‘Get Ready With Me’ நீங்களும் வீடியோ எடுத்து போடுங்க… கையில் கைத்தறி ஆடைகளுடன் பிரமர் மோடி வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் செம வைரல்..!!
சிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பாரம்பரிய கைத்தறித் தயாரிப்புகளை வாங்கி ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், மக்கள் தங்களுக்குப் பிடித்தமான கைத்தறி ஆடைகளை அணிந்து ‘கெட் ரெடி வித் மீ’ என்ற பாணியில் குறும் வீடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்து, உலகளாவிய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சுதேசி இயக்கம்’ மற்றும் மக்கள் காட்டிய ஒற்றுமையை இந்த நாளில் பிரதமர் நினைவு கூர்ந்தார். கடந்த வாரம் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடியது போன்ற அதே உற்சாகத்துடன், ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரும் தேசிய கைத்தறி தினத்தையும் மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
https://www.instagram.com/reel/DbtOkIoCB-H/?utm_source=ig_web_button_share_sheet
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், நாட்டின் நெசவாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். தன்னிறைவு பெற்ற சுயசார்பு இந்தியாவை உருவாக்க மிகச்சிறிய மற்றும் ஏழைக் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாம் வாங்கும் ஒவ்வொரு கைத்தறிப் பொருளும் இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் செயல் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
