LATEST NEWS
தமிழக அரசியலில் அடுத்த அணுகுண்டு… உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து 3 விக்கெட்..? கோட்டையில் கசியும் பகீர் தகவல்..!!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைக் குறிவைத்து அதிரடி கைது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே. சேகர் பாபு மற்றும் வி. செந்தில் பாலாஜி ஆகிய மூன்று திமுக முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்ய முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்த மூன்று முக்கியப் புள்ளிகளையும், தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைவதற்குள் கைது செய்யுமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் அரசியல் நகர்வுகளால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பைச் சந்தித்துள்ளதுடன், திமுகவின் முக்கியத் தலைவர்கள் மீதான இந்த அதிரடிப் பாய்ச்சல் விவகாரம் தற்போது அரசியல் மேடைகளில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி சூடுபிடித்துள்ளது.
