LATEST NEWS
வீட்டுக்கு கிளம்புங்க..! 70 வயசுக்கு மேல் உள்ள மா.செ.,க்களுக்கு கல்தா..? ஸ்டாலினின் ‘அதிரடி ஆபரேஷன்’… திமுகவில் அதிரப்போகும் பவர் சென்டர்கள்..!!
திமுகவில் 70 வயதுக்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக ஒரே பதவியில் நீடித்து வரும் சீனியர்களுக்குப் பதிலாக, புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இந்த முறை முன்னுரிமை வழங்கி வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்தின் மூலமாக, கட்சியில் மாவட்ட செயலாளர்கள் தங்களது பகுதிகளில் தனிப்பட்ட ‘பவர் சென்டர்களாக உருவெடுக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார். மாவட்ட அளவில் அதிகாரப் பரவலாக்கலை ஏற்படுத்துவதன் மூலமும், புதிய முகங்களைக் கொண்டு வருவதன் மூலமும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் புதிய உத்வேகத்தை உருவாக்க முடியும் என தலைமை நம்புகிறது.
இதற்கிடையே, மாவட்ட அளவிலான மாற்றங்கள் மட்டுமின்றி கட்சியின் மாநிலத் தலைமையிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தலைமை முடிவு செய்துள்ளது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான இந்த புதிய உட்கட்சி மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
