LATEST NEWS
“அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்,,, அவரை தூக்கியே தீரணும்” CM விஜய்யின் ஒற்றை உத்தரவு.. அதிகாலையிலேயே உதயநிதி தூக்கப்பட்டதன் ரகசியம்..!!
சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தே தீர வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மிகவும் உறுதியாக இருந்ததாகத் தற்பொழுது அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் இந்த அதிரடி முடிவுக்கு ஆரம்பத்தில் காவல்துறை மற்றும் உள்துறை உயரதிகாரிகள் தரப்பில் சில தயக்கங்களும், நடைமுறைச் சிக்கல்களும் எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உதயநிதியை தற்போதைய சூழலில் கைது செய்தால், அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதில் சட்ட ரீதியான சிக்கல்கள் எழும் என்றும், இதனால் மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு அசாதாரணமான சூழல் உருவாக வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் முதலமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிகாரிகளின் இந்த வாதங்களை ஏற்க மறுத்த முதலமைச்சர் விஜய், “வருகின்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் அனைத்தையும் அரசுத் தரப்பில் பார்த்துக் கொள்ளலாம், சட்டத்தின்படி அவரை உடனடியாகக் கைது செய்யுங்கள்” எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த கடுமையான மற்றும் நேரடி உத்தரவைத் தொடர்ந்தே, அன்றைய தினம் அதிகாலையிலேயே உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
