LATEST NEWS
“ச்ச.. இப்படி ஒரு அண்ணனா… எனக்கு எதுனாலும் பரவால… என் தங்கச்சிக்கு ஒன்னும் ஆகக்கூடாது..!” ஒரு பக்கம் கொட்டுற மழை… இன்னொரு பக்கம் துரத்துற நாய்… அம்புட்டையும் சமாளிச்சு தங்கச்சிய காப்பாத்துன குட்டி வீரன்..!இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!
மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீரும் சேறும் தேங்குவது வழக்கம் தான், ஆனால் அத்தகைய கடினமான சூழ்நிலையிலும் ஒரு சிறிய சிறுவன் தனது தங்கையை கவனித்துக் கொண்ட விதம் இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில், கனமழைக்கு இடையே ஒரு சிறுவன் தன் தங்கையுடன் தண்ணீரும் சேறும் நிறைந்த பாதையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. சுற்றிலும் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க, சாலையில் தண்ணீர் தேங்கி வழிநடப்பதே சவாலாக இருக்கும் சூழலில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
அவ்வளவு மோசமான வானிலையிலும் அச்சிறுவன் தான் மழையில் நனைவதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை. மழைத்துளிகள் தன் தங்கையின் மீது படாதவாறு ஒரு பெரிய போர்வை அல்லது ஷாலை அவள் மீது போர்த்தி பிடித்துக்கொண்டே செல்கிறான். தான் நனைந்தாலும் பரவாயில்லை, தங்கை பாதுகாப்பாக பாதையைக் கடக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவனது முழு கவனமும் இருந்தது. அந்தச் சிறிய வயதிலேயே அவனுக்கிருந்த பொறுப்புணர்ச்சியைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வழியில் ஒரு வெள்ளை நிற நாய் அவர்களைச் சுற்றி வரத் தொடங்கியபோதும், அந்தச் சிறுவன் மிகவும் விழிப்புடன் செயல்பட்டான். ஒரு கையால் தங்கையை மழையிலிருந்து காப்பாற்றிக் கொண்டே, மறுபுறம் நாயின் அசைவுகளையும் கவனித்தான். நாய் தன் தங்கையின் அருகில் வந்ததும், உடனே திரும்பி அதை விரட்டிவிட்டு மீண்டும் தங்கையைப் போர்வையால் மூடி பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். குடை போன்ற எந்தப் பொருளும் இல்லாத நிலையிலும், தனது சொந்த தங்கையின் மீது அவன் காட்டிய இந்த பாசமும் அக்கறையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளது.
