LATEST NEWS
பகீர்… ரசுவா ஆற்றுப் பகுதியில் பேரிரைச்சலுடன் பாய்ந்து வரும் பெருவெள்ளம்..! 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை..!!
நேபாளத்தில் உள்ள போட்கே கோஷி ஆற்றில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கோஷி ஆற்றுப் பகுதியில் உச்சக்கட்ட ‘ரெட் அலர்ட்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரசுவா மாவட்டத்திற்குட்பட்ட ஆற்றுப் பகுதியில் பேரிரைச்சலுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சப்தம் கேட்டதாக எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நுவாகோட், தாடிங் மற்றும் ரசுவா உள்ளிட்ட பகுதிகளுக்குத் தீவிர ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
