LATEST NEWS
“இந்த வலி இன்னிக்கு தான் உங்களுக்கு தெரியுதா?” அப்ப மத்தவங்களுக்கு வலிக்காதா..? உதயநிதியை சட்டசபையிலேயே வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
“மற்றவர்கள் பேசும்போது தான் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் குறுக்கீடு செய்வார்.. ஆனால் இன்று அவர் பேசும்போதே நீங்கள் குறுக்கிட்டுப் பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழக சட்டப்பேரவையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரிடம் சிரித்தபடி நகைச்சுவையாகவும் அதேநேரம் சுட்டிக்காட்டியும் பேசினார். அவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேச முயன்றபோது தொடர்ந்து குறுக்கீடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து உதயநிதி இந்த கருத்தைப் பதிவு செய்தார்.
உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரிடம் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே, தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டெனத் தனது இருக்கையை விட்டு எழுந்து நின்று அதற்குப் பளீச்செனப் பதிலடி கொடுத்தார். உதயநிதியை நோக்கிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடுவதால் ஏற்படும் இந்த வலி இன்னிக்கு தான் உங்களுக்கு தெரிகிறதா?” என்று அனல் பறக்கும் கேள்வியைக் கணையா தொடுத்தார்.
திமுகவினர் இத்தனை காலமாக அவையில் மாற்றுத் திறனாளர்கள் மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் பேசும்போது தொடர்ந்து குறுக்கீடு செய்து வந்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய இந்த அதிரடி உரை அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதயநிதியின் புன்னகையான பேச்சிற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த இந்த நறுக்குத் தெரித்த பதிலடி, சட்டப்பேரவை வளாகத்தில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே தற்போதைய சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
