விஜய் அண்ணன் தூய்மை அரசியல்.. ஆனா சிவகங்கையில் நடப்பது என்ன..? கணவர் மூலம் மெகா வசூல் வேட்டை.. பெண் எம்.எல்.ஏ-வின் அராஜகத்தால் அதிர்ச்சியில் உறைந்த தவெக தொண்டர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் அண்ணன் தூய்மை அரசியல்.. ஆனா சிவகங்கையில் நடப்பது என்ன..? கணவர் மூலம் மெகா வசூல் வேட்டை.. பெண் எம்.எல்.ஏ-வின் அராஜகத்தால் அதிர்ச்சியில் உறைந்த தவெக தொண்டர்கள்..!!

Published

on

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவர், தனது கணவரை முன்னிறுத்தித் தொகுதியில் உள்ள டாஸ்மாக் பார்கள், குவாரிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாகப் பெருமளவில் பணம் வசூலித்து வருவதாகப் படுபயங்கரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதிகாரத்தையும் தனது கணவரின் செல்வாக்கையும் தவறான வழிகளில் பயன்படுத்தித் தொடர்ந்து மிரட்டி இந்த வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது மட்டுமின்றி, தவெக கட்சியில் புதிதாக இணையும் உறுப்பினர்களிடமும் மிகப்பெரிய அளவில் பேரம் பேசப்பட்டு வருவதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பொதுச்செயலாளரிடம் தனக்கிருக்கும் அணுக்கத்தைப் பயன்படுத்தி, கட்சியில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும், இதற்கான டீலிங்குகளை எம்.எல்.ஏ-வின் கணவரே நேரடியாகக் கவனித்து வருவதாகவும் அடுக்கடுக்கான தகவல்கள் கசிந்துள்ளன.

Advertisement

மக்கள் நலப்பணிகளைச் செய்ய வேண்டிய சட்டமன்ற உறுப்பினரே இதுபோன்ற முறைகேடான வசூல் மற்றும் பதவிக்கான பேரங்களில் இறங்கியுள்ளது, சிவகங்கை மாவட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தூய்மையான அரசியல் என்று கூறிக்கொண்டு கட்சித் தலைமை செயல்படும் வேளையில், தவெக-வின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து கட்சித் தலைமை மற்றும் உளவுத்துறை உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை அம்பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in