“மகளைப் பார்க்க வந்த இடத்தில் இப்படியா..?” தனியாக இருந்த பெண்ணைக் குறிவைத்த கட்டிடத் தொழிலாளி.. காதைக் கடித்து குதறிய கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மகளைப் பார்க்க வந்த இடத்தில் இப்படியா..?” தனியாக இருந்த பெண்ணைக் குறிவைத்த கட்டிடத் தொழிலாளி.. காதைக் கடித்து குதறிய கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகப் பகுதியில், வசந்த மல்லிகா (56) என்ற பெண் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். குற்றவாளியைப் பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்ட நிலையில், போலீசார் 15 மணி நேரத்திற்குள் கொலையாளியை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் சிப்காட் பாரதி நகர் பகுதியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்த, மல்லல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா (54) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்ததால், அங்கு அடிக்கடி வந்து சென்ற சுப்பையா கடந்த 4 நாட்களாக வசந்த மல்லிகாவின் வீட்டை நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து உள்ளே புகுந்த அவர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரை கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியையும், காதை அறுத்து 1 பவுன் தங்கத் தோடையும் பறித்துச் சென்றுள்ளார்.

Advertisement

சுப்பையாவிடமிருந்து 7 பவுன் தாலிச் சங்கிலியை மீட்ட போலீசார், அவர் ரூ.16,000-க்கு விற்ற தங்கத் தோடு குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சுப்பையாவின் மகன் மீது ஏற்கனவே கோவையில் மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் தெரியவந்துள்ளது. இக்கொடூரக் கொலை நடந்த 15 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீசாரைப் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். எனினும், பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் காதை அறுத்து நகைகளைப் பறித்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in