CINEMA
BREAKING : ரவுடி சுள்ளான் மதன் வழக்கு.. மேலும் 3 பேர் கைது..!!
சிவகங்கை அருகே பிரபல ரவுடி ‘சுள்ளான்’ மதன் (26) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 3 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதிபதி ராஜா (26), மணிகண்டன் (25), மற்றும் விஜய் (19) ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பயங்கர கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இக்கொலை வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக உள்ள மற்ற முக்கிய நபர்களைப் பிடிப்பதற்காகச் சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் 6 தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தத் துரித நடவடிக்கை மற்றும் அடுத்தகட்ட விசாரணைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களைச் சிவகங்கை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
