CRIME
“இருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்..” நண்பன் செய்த துரோகத்தால் பைபாஸில் சடலமாக கிடந்த வாலிபர்.. திடுக்கிடும் பின்னணி..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கள்ளக்காதல் தகராறில், சின்னராஜ் (26) என்ற ஓட்டல் தொழிலாளி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலிகிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ், காரைக்குடி – திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தபோது, கணவரைப் பிரிந்து வாழ்ந்த வெண்ணிலா (28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். கஞ்சா வழக்கு ஒன்றில் ராமநாதபுரம் சிறையில் இருந்தபோது, மண்டபத்தைச் சேர்ந்த நம்பு முனீஸ்வரன் (29) என்பவருடன் சின்னராஜுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு நம்பு முனீஸ்வரனை அடிக்கடி சின்னராஜ் வீட்டிற்கு அழைத்து வந்ததால், வெண்ணிலாவுக்கும் அவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து சின்னராஜைப் பிரிந்த வெண்ணிலா, நம்பு முனீஸ்வரனுடன் தேவகோட்டையில் குடியேறியதால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு காரைக்குடி வந்த நம்பு முனீஸ்வரன், வெண்ணிலாவின் சித்தி மகனான ராமசாமி (22) என்பவருடன் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் வைத்து சின்னராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிவகங்கை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சின்னராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துரிதக் கொலை வழக்கில், தப்பியோடிய நம்பு முனீஸ்வரன் மற்றும் ராமசாமி ஆகிய இருவரையும் குன்றக்குடி போலீசார் அடுத்த 30 நிமிடங்களிலேயே அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
