CRIME
“என் புருஷனை நீ எப்படி…” கணவனின் கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி.. நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தனது குடும்பப் பிரிவுக்குக் காரணம் எனக் கருதி இன்ஸ்டாகிராம் தோழி மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்குமாற்றால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண், இன்ஸ்டாகிராம் மூலம் கவியரசன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், கணவருக்கு ஜெயஸ்ரீ என்ற மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் தம்பதியரிடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிநயா, காரைக்குடி நூறடி சாலையில் உள்ள உணவகத்திற்குச் சென்ற ஜெயஸ்ரீயை வழிமறித்து, தனது சகோதரி அருணாதேவி மற்றும் தோழி பிரியாவுடன் சேர்ந்து இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்தை இளைஞர் ஒருவர் வீடியோ எடுக்க, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காரைக்குடி வடக்கு போலீசார், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தோழி பிரியா, வீடியோ எடுத்த சந்துரு மற்றும் பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் ஆஜராவதாகக் கூறிவிட்டுத் தங்களது செல்போன்களை அணைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளியான அபிநயா மற்றும் அவரது சகோதரி அருணாதேவி ஆகிய இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
