புகார் கொடுக்க வந்த இடத்துல இப்படியா..? நள்ளிரவில் காவல்நிலையத்திற்குள் பாலியல் வன்கொடுமை… போலீஸ்காரர் செய்த காரியம்.. இன்ஸ்பெக்டர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்.!!! – cinefeeds
Connect with us

CRIME

புகார் கொடுக்க வந்த இடத்துல இப்படியா..? நள்ளிரவில் காவல்நிலையத்திற்குள் பாலியல் வன்கொடுமை… போலீஸ்காரர் செய்த காரியம்.. இன்ஸ்பெக்டர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்.!!!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா மாவட்டத்தில், காவல் நிலையத்திற்கு நியாயம் கேட்டு வந்த பெண் ஒருவர், அங்கு பணியாற்றிய போலீஸ்காரராலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்ஹரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அந்தப் பெண், தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப் புகார் அளிக்க இரவு நேரத்தில் காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது நேரம் அதிகமாகிவிட்டதால், அங்கிருந்த போலீஸார் அவரை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் அந்தப் பெண்ணின் அறைக்குள் நுழைந்த வயர்லெஸ் ஆபரேட்டராகப் பணியாற்றிய நீரஜ் லக்ரா என்ற போலீஸ்காரர், அவரை மிரட்டி வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விடிந்ததும் பாதிக்கப்பட்ட பெண் இக்கொடூரம் குறித்து மற்ற போலீஸாரிடம் முறையிட்டதை அடுத்து, இச்சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் நீரஜ் லக்ராவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் காவல் நிலையப் பொறுப்பாளர் சஞ்சய் பிரசாத் உள்ளிட்ட 6 போலீஸார் அதிரடியாகப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவம் நடந்த அறைக்கு போலீஸார் சீல் வைத்துள்ளதோடு, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் (SIT) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in