திமுகவின் ‘டெல்லி’ கணக்கை கலைக்கும் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஆடிப்போன அறிவாலயம்.. தொகுதி மறுவரையறையில் செக் மேட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுகவின் ‘டெல்லி’ கணக்கை கலைக்கும் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஆடிப்போன அறிவாலயம்.. தொகுதி மறுவரையறையில் செக் மேட்..!!

Published

on

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் கூட்டப்பட்டுள்ள தமிழக எம்பிக்கள் கூட்டம், மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் திரண்டு, பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு அரசியல் ரீதியாகச் செக் வைக்கும் ஒரு முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த மசோதாவால் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதனைத் தீவிரமாக எதிர்க்கிறது. இருப்பினும், அனைத்து மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு தொகுதி எண்ணிக்கையைத் தட்டையாக உயர்த்தி, தொகுதிப் பகிர்வை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புப் படியே மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், இந்த மசோதாவை ஆதரிக்கலாம் என்ற சாதகமான நிலப்பாட்டை திமுக எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் இந்த சாஃப்ட் அப்ரோச் மற்றும் சமரசப் போக்கைத் தடுத்து நிறுத்தி, மசோதாவிற்கு எக்காரணம் கொண்டும் ஆதரவளிக்கக் கூடாது என அனைத்துக் கட்சி எம்பிக்கள் மூலமாக அழுத்தம் கொடுப்பதே தமிழக வெற்றிக் கழக அரசின் முதன்மை நோக்கமாகும்.

Advertisement

மறுபுறம், தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் தங்களை விட தவெக அரசு கூடுதல் முக்கியத்துவம் பெறுவதைத் தவிர்க்கவும், நாடாளுமன்றத்தில் தங்களின் 30 எம்பிக்கள் பலத்துடன் தனித்து முடிவெடுக்கும் உரிமையைத் தக்கவைக்கவும் திமுக இந்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின் நகர்வுகள், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் திசையையும், திமுக-தவெக இடையேயான அடுத்தகட்ட அரசியல் மோதலையும் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in