“பதவி ஆசை வார்த்தை காட்டி கூப்பிட்டாங்க, இப்போ கண்டுக்கல!” தவெக-வுக்கு வந்த ‘மாஜிக்கள்’ கதறல்… கலக்கத்தில் தவெக தலைமை!..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பதவி ஆசை வார்த்தை காட்டி கூப்பிட்டாங்க, இப்போ கண்டுக்கல!” தவெக-வுக்கு வந்த ‘மாஜிக்கள்’ கதறல்… கலக்கத்தில் தவெக தலைமை!..!!

Published

on

அதிமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் பலர், தங்களுக்கு கட்சியில் உரிய பதவி கிடைக்கவில்லை என்ற கடுமையான வேதனை குரலை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். தேர்தல் சமயத்தில் தவெக-வில் இணைந்தால் கட்சிப் பதவியோ அல்லது வாரியப் பதவியோ தருவதாக ஆசை வார்த்தை கூறி தங்களை அழைத்ததாகவும், ஆனால் தற்போது தங்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் தங்களது ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

குறிப்பாக, அண்மையில் தங்களது MLA பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த பிற கட்சி பிரமுகர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் தங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்த அதிமுக ‘மாஜிக்கள்’ புலம்பி வருகின்றனர். கட்சிக்குள் தங்களுக்குப் பின்னால வந்தவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பதவிகள் அள்ளிக் கொடுக்கப்படும் வேளையில், தங்களை ஓரங்கட்டி வைத்துள்ளதாக அவர்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக அறிவாலய மற்றும் ராயப்பேட்டை வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

Advertisement

தவெக-வில் ஏற்பட்டுள்ள இந்த உள்விவகார மோதல்கள் மற்றும் நிர்வாகிகளின் தொடர் புறக்கணிப்புகள் காரணமாக, அதிருப்தியில் இருக்கும் இந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மிக விரைவில் தவெக-விலிருந்து விலகப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய இந்த அரசியல் சூழலில், தவெக-வுக்குள் வெடித்துள்ள இந்த ‘பதவி பஞ்சாயத்து’ மற்றும் அதிருப்திப் படலத்தின் பின்னணி அரசியல் அரங்கில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in