LATEST NEWS
“அன்பில் மகேஷ் மனைவியிடம் தான் பணம் கொடுத்தேன்” 300,00,000.00 கோடி சீட்டிங்க் வழக்கில்… அரசகுமார் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு..!!!
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை, பள்ளிக் கல்வித்துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதி ஆகும் .
தமிழகம் முழுவதும் சுமார் 117 பள்ளிகளிடம் அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகவும், கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தித் தருவதாகவும் கூறி ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக பிடி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிடி அரசகுமார் A1 குற்றவாளியாக சிறையில் உள்ள நிலையில், A2 குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
முத்துக்குமார், அன்பில் மகேஷின் பள்ளிப் பருவ நண்பர் என்றும், முன்னாள் தேமுதிக எம்எல்ஏவாக இருந்த அவர் பின்னர் திமுகவில் இணைந்துள்ளார்.. இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முத்துக்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மும்பையில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிறையில் உள்ள பிடி அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வசூலித்த பணத்தில் பெரும் தொகையை அன்பில் மகேஷின் மனைவியிடம் கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மேலும், தலைமறைவாக உள்ள முத்துக்குமாரின் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது மனைவியிடம் அடுத்தகட்ட விசாரணை நடைபெறுமா, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
