LATEST NEWS
வெடிக்கும் மோதல்..! நெருக்கமானவர்களுக்கு முக்கிய பதவியை தூக்கி கொடுக்கும் CM விஜய்.. தகவல் சரிபார்ப்பு குழு தலைவராக ரசிகர் மன்ற பிரமுகர்.. அதிகாரிகள் ஷாக்..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு நெருக்கமானவர்களையும், அவரது கட்சிப் பின்னணி கொண்டவர்களையும் அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருவது, கோட்டை வட்டாரத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் உச்சகட்டமாக, தமிழ்நாடு அரசின் மிக முக்கியப் பிரிவான ‘தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்பு குழு’வின் தலைமைப் பொறுப்பில், விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றிய ‘குரு தலைவா’ நியமிக்கப்பட்டுள்ளார். வதந்திகளையும் போலிச் செய்திகளையும் கண்டறியும் இந்தத் துறைக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தகுதியான அதிகாரிகளை நியமிக்காமல், கட்சி விசுவாசி ஒருவரை நியமித்திருப்பது அதிகாரத்துவ வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அரசுத் துறைகளில் நீண்ட அனுபவமும், தகுதியும் வாய்ந்த பல திறமையான அதிகாரிகளை ஓரம் கட்டிவிட்டு, முழுக்க முழுக்க அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கத்தின் அடிப்படையில் மட்டுமே இத்தகைய முக்கியப் பதவிகள் தாராளமாக வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் புலம்பல்கள் கேட்கின்றன. முதலமைச்சரின் இந்த அதிரடிப் போக்கு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் நடுநிலைமையையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கோட்டை வட்டார விவாதங்கள் தெரிவிக்கின்றன.
