LATEST NEWS
தமிழ்நாட்டில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி… பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி.. அதிர்ச்சியில் உறைந்த திமுக-அதிமுக..!!
தமிழகச் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் போது, “தற்போது நடைபெற்று வருவது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியிலான தைரியமான ஆட்சிதான்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேச்சு சட்டமன்றத்தில் இருந்த அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடுமையான அதிர்வலைகளைக் கிளப்பியது.
பேரவையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்ட நடவடிக்கைகள் மற்றும் நதிநீர் பங்கீடு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் அளித்த விளக்கத்தைப் சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மாநிலத்தில் கடுமையான மழைப் பொழிவுத் பற்றாக்குறை நிலவியதை விரிவாக எடுத்துரைத்தார்.
இத்தகைய சவாலான சூழ்நிலையிலும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளாலும் சட்டத்துறை வல்லுநர்களின் தொடர் போராட்டத்தினாலும்தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமிருந்து தமிழகத்திற்குச் சேர வேண்டிய 3,500 கனஅடி நீரைப் பெற முடிந்தது என்று அவர் விவரித்தார். மேலும், எந்தவொரு காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நதிநீர் உரிமைகளை இந்த அரசு விட்டுக் கொடுக்காது என்பதையும் அவர் உறுதியாகப் பதிவு செய்தார்.
முன்னதாக, எதிர்கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பேசுகையில் “மாநிலத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலரும்” என்று குறிப்பிட்டதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை வழியிலும், அம்மா ஜெயலலிதாவின் தைரியமான முடிவுகளின் வழியிலும் மக்கள் நலனுக்கான ஒரு சிறந்த நிர்வாகத்தையே எங்கள் தலைவர் முதலமைச்சர் விஜய் தற்போது வழங்கி வருகிறார்” என்று பேரவையில் அழுத்தமாகக் கூறி உரையை நிறைவு செய்தார்.
