LATEST NEWS
அப்படிப்போடு..! மதுபானம் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடாது… அமைச்சர் விக்னேஷ் போட்ட குண்டு.. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!
“மக்களைச் சீரழிக்கும் மதுபானம் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்று சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் விவகாரம் குறித்துப் பேசிய அவர், மதுவினால் கிடைக்கும் வருவாயை எப்படியாவது உயர்த்தியே தீருவோம் என தமிழக வெற்றிக் கழக அரசு என்றைக்குமே கூறியது கிடையாது என்று விளக்கமளித்தார்.
மேலும், தங்களது அமைச்சகத்தின் கீழ் உள்ள டாஸ்மாக் துறையில் நிலவி வந்த பல்வேறு முறைகேடுகளையும், நீண்டகால ஊழல்களையும் அரசு முழுமையாக ஒழித்துக் கட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே தற்போதைய டாஸ்மாக் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது என்றும், நிர்வாகச் சீர்திருத்தங்கள் காரணமாக இந்த வருவாய் எதிர்காலத்தில் இன்னும் மேலும் உயரும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தனது உரையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
