“கனவுல வந்து கூப்பிடுறான்ப்பா… அவன் இல்லாம வாழ முடியாது..!” காதலன் இறந்த சோகத்தில் காதலி எடுத்த கொடூர முடிவு.. பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கனவுல வந்து கூப்பிடுறான்ப்பா… அவன் இல்லாம வாழ முடியாது..!” காதலன் இறந்த சோகத்தில் காதலி எடுத்த கொடூர முடிவு.. பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், ஷாம்ஷாபாத் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியைச் சேர்ந்த நர்மதா என்ற இளம் பெண், தன் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நர்மதாவும், நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரும் அவர்களுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாகக் கொடூரமான சாலை விபத்து ஒன்றில் சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணக் கனவுகளுடன் இருந்த நர்மதாவால் தன் நிச்சயிக்கப்பட்ட காதலனின் திடீர் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் குடும்பத்தினரிடமும் சகோதரியிடமும் அழுது புலம்பிய நர்மதா, சித்தார்த் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும், தினமும் இரவில் அவன் தன் கனவில் வந்து தன்னையும் அவனுடன் வருமாறு அழைப்பதாகவும் கூறி வந்துள்ளார். குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்ற முயன்ற போதிலும் அவரது மன அழுத்தம் குறையவில்லை.

Advertisement

இந்நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டில் தனியாக இருந்த நர்மதா தன் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து ஷாம்ஷாபாத் ஆர்ஜிஐஏ காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தந்தையின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in