“அடேங்கப்பா…! இனி மாசம் ரூ.33,000 சம்பளம்… கூடவே 20,000 அட்வான்ஸ்..! டாஸ்மாக் ஊழியர்கள் செம்ம லக்கிதான்..! சட்டசபையில அமைச்சர் அறிவிச்ச மெகா ஆஃபர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேங்கப்பா…! இனி மாசம் ரூ.33,000 சம்பளம்… கூடவே 20,000 அட்வான்ஸ்..! டாஸ்மாக் ஊழியர்கள் செம்ம லக்கிதான்..! சட்டசபையில அமைச்சர் அறிவிச்ச மெகா ஆஃபர்..!!

Published

on

டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும், பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நான்கு முறை சங்கப் பிரதிநிதிகளுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் டாஸ்மாக் நிர்வாக குழுவின் முடிவின் அடிப்படையிலும் சில புதிய அறிவிப்புகளை சட்டமன்ற பேரவையில் அமைச்சர் வெளியிட்டார்.

23 ஆண்டுகளாக தொடர்ந்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த 23 ஆண்டுகளாக ரூ.2000-ல் ஆரம்பித்து ரூ.14,000 வரை மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சரியான ஊதியம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இனி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680-ம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

Advertisement

மேலும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும், ஆண்டிற்கு வழங்கப்படும் 3 சீருடை துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் டாஸ்மாக் கடைகளில் தூய்மை பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய சில்லறை செலவினங்களாக மாதந்தோறும் மாநகராட்சி கடைகளுக்கு ரூ.5,000-ம், நகராட்சி மற்றும் பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4,000-ம், கிராமப்புற கடைகளுக்கு ரூ.3,000-ம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in