“டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டவன் நான்”… சொந்தக் கதையைக் கூறி சட்டசபையைக் கண் கலங்க வைத்த அமைச்சர் விக்னேஷின் வைரல் ஸ்பீச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டவன் நான்”… சொந்தக் கதையைக் கூறி சட்டசபையைக் கண் கலங்க வைத்த அமைச்சர் விக்னேஷின் வைரல் ஸ்பீச்..!!

Published

on

“டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டவன் நான்” என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் தனது சிறுவயது கால நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கும் தனக்கும் சிறுவயதிலிருந்தே தொடர்பு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தங்களது குடும்பமும் ஒன்று என்றும், இதனால் நானும் என் தாயும் மிகுந்த கஷ்டங்களைச் சந்தித்துள்ளோம் என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒட்டுமொத்த மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று தான் சிறு வயதிலேயே எண்ணியதுண்டு என்றும் அவர் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

சிறுவயதில் மதுக்கடைகளை மூட நினைத்த தனக்கு, இன்று அதே மதுவிலக்குத் துறை அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருப்பது காலத்தின் சூழலா அல்லது கடவுளின் கட்டளையா என்று தெரியவில்லை என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அமைச்சர் விக்னேஷ் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். மதுவினால் ஏற்படும் பாதிப்புகளைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்த ஒருவரே இத்துறைக்கு அமைச்சராகியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in