LATEST NEWS
காலையிலேயே சீமான் தலையில் விழுந்த இடி… நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த புகழேந்தி மாறன்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி மாறன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் முன்னிலையில் அவர் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். நாம் தமிழர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த முக்கிய நிர்வாகி ஒருவர் தவெக-வில் இணைந்துள்ளது அக்கட்சி வட்டாரங்களிலும், தமிழக அரசியல் களத்திலும் தற்பொழுது பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த புதிய அரசியல் பயணம் குறித்து எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள புகழேந்தி மாறன், தமிழ் மற்றும் தமிழர்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து அயராது உழைப்பேன் எனத் தெரிவித்துள்ளார். தவெக-வில் இணைந்துள்ள இந்த புதிய அரசியல் பாதையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டிற்கும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவதாக அவர் தனது பதிவில் உறுதி அளித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு பல்வேறு மாற்றுக்கட்சி நிர்வாகிகளும் தவெக நோக்கி நகர்வதை இந்த நிகழ்வு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
