LATEST NEWS
பகீர்! திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் தொழிலாளி திடீரெனத் தீக்குளிப்பு – பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், கஸ்தூரிரங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (38) என்ற தொழிலாளி திடீரெனத் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் பிரகாரப் பகுதியில் அவர் எதிர்பாராதவிதமாக உடலில் தீ வைத்துக் கொண்டதைக் கண்டு அங்கிருந்த பக்தர்களும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுரேஷிற்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இதனால் கடந்த சில காலமாக அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கோவில் வளாகத்தைச் சுற்றித் திரிந்துள்ளார். இந்த மன விரக்தியின் காரணமாகவே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
