ஐய்யோ கொடுமையே..! வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படத்தைப் பார்த்து அலறிய போலீஸ் அண்ணன்… கதறித் துடித்தபடி ஓடிவந்த தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… திருச்செந்தூர்ல நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐய்யோ கொடுமையே..! வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படத்தைப் பார்த்து அலறிய போலீஸ் அண்ணன்… கதறித் துடித்தபடி ஓடிவந்த தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… திருச்செந்தூர்ல நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் ஜெய் நகரில், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ரேணுகா தேவி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது கணவர் அன்புமணி ஆவார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்; அதில் மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகனான தங்கபாலன் கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலப் பாதிப்பிற்காக மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அன்புமணி பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்த வேளையில் வீட்டில் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் பேராசிரியை ரேணுகா தேவியும் அவரது இளைய மகன் தங்கபாலனும் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது திடீரென தங்கபாலன் வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை எடுத்துத் தனது தாயாரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் தலை கொடூரமாகப் பிளந்து, இரத்த வெள்ளத்தில் ரேணுகா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் உயிரிழந்த பிறகு, தங்கபாலன் தனது செல்போனில் தாயின் உடலைப் புகைப்படமாக எடுத்து, சென்னையில் உள்ள தனது மூத்த சகோதரனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மூத்த மகன் உடனடியாகத் தந்தைக்குத் தகவல் தெரிவிக்க, பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த தந்தை தனது மனைவி இறந்துகிடப்பதைக் கண்டு உறைந்துபோனார்.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரேணுகா தேவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்புமணி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தங்கபாலனைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் அனுமதித்தனர். ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை சொந்த மகனாலேயே ஆட்டுக்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in