9 குவாட்டர் பாட்டில்களை ஒருவர் வைத்திருந்தால்…. அது எப்படி சட்ட விரோதம் ஆகும்..? போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

9 குவாட்டர் பாட்டில்களை ஒருவர் வைத்திருந்தால்…. அது எப்படி சட்ட விரோதம் ஆகும்..? போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு..!!

Published

on

மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் மீது போலீசாரால் பதிவு செய்யப்பட்டிருந்த சட்டவிரோத மது விற்பனை வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது . இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9 குவாட்டர் மதுபான பாட்டில்களை ஒருவர் வைத்திருந்ததற்காக அவர் மீது சட்டவிரோத வழக்குத் தொடர்ந்தது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளது .

“9 குவாட்டர் மதுபான பாட்டில்களை ஒருவர் வைத்திருந்தால், அது எப்படி சட்ட விரோதம் ஆகும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த விவகாரத்தில் போலீசார் சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் எனக் கண்டனம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தங்கராஜ் மீதான வழக்கு முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in