LATEST NEWS
சீப்பை ஒழிச்சி வச்சா கல்யாணம் நின்னுடுமா..? 3 மாசத்துல 20,000 கோடி ரூபாய் கடன்… இபிஎஸ் கடும் தாக்கு…!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?” என்று பழமொழியைக் கூறி, ஒரு சிலர் வராததால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய உள்விவகாரங்களை எல்லாம் பொது வெளியில் பேச முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தொடர்ந்து தற்போதைய திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த புதிய அரசு பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு தொடர்ந்து கடன் வாங்குவது மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
